தமிழகத்தில் புதிதாக 5870 பேருக்கு கொரோனா; மேலும் 61 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

0
141

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,870 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 61 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,748 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,859 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 3,98,366 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 965 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,685 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 19 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2,845 ஆக உள்ளது. மேலும், இதுவரை 1,26,428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் இன்றைய தேதியில் 11,412 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 51,583 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 81,793 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 52,12,534 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Previous articleஇத்தனை நாட்களுக்கு பிறகு நியூஸிலாந்தில் சோகம்
Next articleஉக்ரேனில் நடந்த வினோத சம்பவம்