பல்கலைகழகத்தில் இன்று நடக்கும் தேர்வுகள் ரத்து! மீண்டும் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு!
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மழை பொழிந்து வந்தது.அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தான் பள்ளிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வட மாநிலங்களில் குளிர் காலத்தில் அதிகளவு பனி பொழிவது வழக்கம் தான். அதன் அடிப்படையில் தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகின்றது.கடந்த ஜனவரி 9 ஆம் தேதி கடும் குளிர் அலை ஏற்பட்டது.டெல்லி நகரின் மையப்பகுதிகளில் இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக இரண்டு டிகிரியாக வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.
அதன்காரணமாக உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.தற்போது டெல்லி மற்றும் அண்டை மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.அதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மூடுபனி காரணமாக ரயில் மற்றும் விமான சேவை பாதிப்படைகிறது அதன் காரணமாக தாமதமாகி வருகின்றது.இந்நிலையில் ஸ்ரீநகரில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் மற்றும் கிளஸ்டர் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வேறு ஒரு தேதியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.