இந்த ராசிக்கு சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்! இன்றைய ராசி பலன் 20-06-2021 Today Rasi Palan 20-06-2021

0
221

 

இன்றைய ராசி பலன்- 20-06-2021

நாள் : 20-06-2021

தமிழ் மாதம்: 

 ஆனி 06, ஞாயிற்றுக்கிழமை 

 சுப ஹோரைகள் 

காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

இராகு காலம்:

மாலை 04.30 – 06.00

எம கண்டம்: 

பகல் 12.00 – 01.30

குளிகன்: 

பிற்பகல் 03.00 – 04.30,

திதி:

 தசமி திதி மாலை 04.21 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.

நட்சத்திரம்: 

சித்திரை நட்சத்திரம் மாலை 06.49 வரை பின்பு சுவாதி.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தில் உறவினர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கடன் பிரச்சினை குறையும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் வாங்கும் யோகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே சுபகாரிய முயற்சிகளில் சில தடைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். நண்பர்கள் வருகை சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். பிள்ளைகளோடு இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனை அளிக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

 

மகரம்

மகர ராசிக்காரர்களே நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்கு உங்களுக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். செய்யும் செயல்களில் ஆர்வம் குறையும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும்.

 

மீனம்

 

மீனம் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானம் தேவை.

 

Previous articleSBI வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்? இவையெல்லாம் 40 நிமிடத்திற்கு இயங்காது!
Next articleநண்பன் எப்பொழுதுமே வெயிட் தான்! தன் நண்பனுக்காக உயிரை விட்ட நரிகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here