இன்றைய ராசி பலன் 29-08-2020 Today Rasi Palan 29-08-2020

0
175

இன்றைய ராசி பலன்29-08-2020
நாள்29-08-2020
தமிழ் மாதம்:
ஆவணி 13, சனிக்கிழமை,
நல்ல நேரம்:
காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.
இராகு காலம்:
பகல் 9.00 முதல் 10.30 வரை.
எம கண்டம்:
மதியம் 1.30 முதல் 3.00 வரை.
குளிகன்:
காலை 6.00 முதல் 7.30 வரை,
திதி:
ஏகாதசி திதி காலை 08.18 வரை பின்பு வளர்பிறை துவாதசி.
நட்சத்திரம்:
பூராடம் நட்சத்திரம் பகல் 01.02 வரை பின்பு உத்திராடம்

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் வீட்டில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே  இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்ககூடிய வாய்ப்புகள் உருவாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் ஓரளவு குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று உத்தியோக ரீதியாக பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

துலாம்

துலா  ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும்ழழாழழ வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் பிள்ளைகள் வழியில் குடும்பத்தில் சந்தோஷமான நிகழச்சிகள் நடைபெறும். சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படலாம். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே  இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். திடீர் வெளியிட பயணம் செல்ல நேரிடும்.

Previous articleசட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்த பொதுநல வழக்கு: உச்சநீதிமன்றத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!
Next articleசென்னை அணி வீரர்களுக்கு இத்தனை பேருக்கு கொரோனாவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here