இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல் : மைதானத்தைப் பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்நிலையில், இன்று இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டுள்ளன.
இலங்கையில் உள்ள பாலக்கலே மைதானத்தில்தான் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. இலங்கையில் மிகப்பெரிய மைதானம் எது என்றால், அது பாலக்கலே மைதானம்தான்.
இந்த மைதானத்தின் பவுண்டரிகள் எல்லைகள் ரொம்ப நீளம் கொண்டவை. சைட் பவுண்டரி எல்லை 75 மீட்டர் தூரமும், ஸ்ட்ரைய்ட் பவுண்டரி எல்லை 80 மீட்டர் தூரமும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனால், பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்றால் ஓடித்தான் ஆக வேண்டும். அதேபோல், இந்த மைதானத்தில் 65 மீட்டர் தூரத்தில் சிக்சர்களை அடிக்கவே முடியாது.
நடைபெற்ற வங்கதேசம் – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஒரு சிக்சர் மட்டும் தான் அடிக்க முடிந்தது.
இந்நிலையில், இன்று விளையாட உள்ள இந்திய-பாகிஸ்தான் போட்டியில் நட்சத்திர வீரர்களை தவிர வேறு எந்த வீரராலும் சிக்ஸர் அடிக்க முடியுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.