இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

Photo of author

By Sakthi

இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

Sakthi

நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு 10,000க்கு கீழே சென்றது கடந்த 24 மணி நேரத்தில் 8,813பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,813 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 4,42,77,194 என்ற நிலைக்குச்சென்றது.

இந்த நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4,36,38,844 என ஆனது. இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 29 பேர் பலியானதன் காரணமாக, பலியானோரின் எண்ணிக்கை 5,27,098 என இருந்து வருகிறது.

ஆனால் தற்சமயம் 1,11,252 பேர் இந்த நோய் தொற்று காரணமாக, சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரையில் 208.31 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.