வெளியிடப்பட்டது பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல்! மாணவர்கள் ஆர்வம்!

0
77

தமிழகத்தில் இருக்கின்ற 434 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் இருக்கின்றன இந்த இடங்களுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். www.tnonline.org இன்று இணையதளத்தில் தங்களுடைய தரவரிசை பட்டியலை அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சற்றேற குறைய ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பொறியியல் படிப்பதென்றால் மாணவர்கள் இடையே மிகப் பெரிய எழுச்சி காணப்பட்டது. அதன் விளைவாக, தமிழ்நாடு முழுவதும் பல பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டனர் வருடம் தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்து வேலை தேடுவதில் ஈடுபட்டார்கள்.

ஆனால் தற்போது இந்த பொறியியல் படிப்பு என்று சொன்னாலே மாணவர்கள் ஓட்டம் பிடித்து விடுகிறார்கள். அந்தளவிற்கு இந்த பொறியியல் படிப்பு மீது மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து போய்விட்டது.

12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் மற்றும் இளம் தொழில்நுட்பவியல் போன்ற பொறியியல் படிப்புகளில் இணைவதற்கு தமிழக அரசின் சார்பாக இணையதளத்தின் மூலமாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங் பங்கேற்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 1.69 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.

மதிப்பெண் அடிப்படையில் புது தரவரிசையில் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், ஜாதி ரீதியிலான தரவரிசையும் பட்டியலில் இடம்பெறும். இந்த தரவரிசை அடிப்படையில் தான் இணையதளத்தின் மூலமாக கவுன்சிலிங்கில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 20 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் அரசு பள்ளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு எதிர்வரும் 25ஆம் தேதி ஆரம்பமாகி அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

இதனை எடுத்து உரையாடிய அமைச்சர் பொன்முடி தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களின் பெயர்களையும் வெளியிட்டார். 1,58,157 பேருக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது இந்த வருடத்தில் பொறியியல் படிப்புகளில் இணைவதற்கு விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சென்ற வருடத்தை விடவும், இந்த வருடம் 36000 பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் எனவும், பொறியியல் படிப்பில் இணைவதற்கான ரேண்டம் எண் இந்த வருடம் இல்லை எனவும், தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு சேர்க்கையில் 2️ சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், கூறப்பட்டுள்ளது.

அதோடு தரவரிசை பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ, வேறு ஏதாவது குறைகள் இருந்தாலோ, இன்று முதல் வரும் 19ஆம் தேதிக்குள் TNEA Seva Centre-ல் முறைகளை பதிவு செய்யலாம். கோரிக்கைகள் நியாயமாக இருந்தால் உடனடியாக தீர்த்து வைக்கப்படும் அதேபோல 18004250110 என்ற எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவிக்கலாம்.