இன்றைய ஐபிஎல் போட்டி!! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய குஜராத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை!

0
222
#image_title
இன்றைய ஐபிஎல் போட்டி!! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய குஜராத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை!
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் விளையாடவுள்ளது.
தற்போது புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் காயம் காரணமாக கடைசி சில போட்டிகளில் விளையாடாத திலக் வர்மா அணிக்கு திரும்பியிருப்பது மும்பை அணிக்கு பலமாக கருத்ப்படுகின்றது. இன்றய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும்.
புள்ளிப்பட்டியலில் 16 புள்ளகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. இருப்பினும் முதலிடத்தில் இருந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்று நினைக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்றைய பேட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுவிடும். ஆக பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற வேண்டும் என்ற நினைப்பில் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்றைய போட்டியில் விளையாடவுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இதுவரை நேருக்கு நேராக 2 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதும் இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறுகின்றது.
Previous articleடுவிட்டருக்கு புதிய பெண் CEO-எலான் மஸ்க் அறிவிப்பு!!
Next articleகுழந்தைகளுக்கு இலவச LKG வகுப்புகள்! 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளது!!