டுவிட்டருக்கு புதிய பெண் CEO-எலான் மஸ்க் அறிவிப்பு!!

0
134
#image_title
டுவிட்டருக்கு புதிய பெண் CEO-எலான் மஸ்க் அறிவிப்பு!
பிரபல சமூக வலைதளாமன டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய சி.இ.ஓவாக பெண் ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளதாக  டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டருக்கு மட்டுமில்லாமல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் சேர்த்து அந்த பெண் சி.இ.ஓவாக செயல்படுவார் என்று கூறியுள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தினை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு புதிய வசதிகளை எலான் மஸ்க் அவர்கள் டுவிட்டரில் கொண்டு வந்துள்ளார். மேலும் பல வசதிகளை டுவிட்டரில் கொண்டுவரப் போகிறார் எலான் மஸ்க். அண்மையில் எலான் மஸ்க் அவர்கள் டுவிட்டர் செயலியில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறினார்.இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய சி.இ.ஓவை நியமித்துள்ளேன் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
எலான் மஸ்க் அவர்கள் “டுவிட்டர் நிறுவனத்திற்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் சேர்த்து புதிதாக பெண் சி.இ.ஓ ஒருவரை நியமித்துள்ளேன். புதிதாக நியமித்த பெண் சி.இ.ஓ ஊன்னும் ஒன்றரை மாதத்தில் பொறுப்பேற்று பணிகளை செய்ய தொடங்குவார். நான் நிர்வாகத் தலைவராக செயல்பட்டு டுவிட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களை மேற்பார்வையிட உள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.