ஐபிஎல் இன்றைய போட்டி! வெற்றிக்காக பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!!

Photo of author

By Sakthi

ஐபிஎல் இன்றைய போட்டி. வெற்றிக்காக பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடவுள்ளது. ஐபிஎல் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரண்டு அணிகளும் விளையாடவுள்ளது.
இன்று நடக்கும் இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் 8வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். அதுவே கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் 5வது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
இரண்டு அணிகளுமே வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடவுள்ளதால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதும் இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.