மலப்புரத்தில் நடத்த படகு விபத்து! இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு!!

0
110
#image_title
மலப்புரத்தில் நடத்த படகு விபத்து. இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு.
கேரள மாநிலத்தில் மலப்புரத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. இதையறிந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே நேற்று இரவு சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகு விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படகு விபத்தில் காணாமல் போன மேலும் சில பயணிகளை தேடும் பணியில் மீட்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று ஆய்வு செய்யவுள்ளார். இதையடுத்து படகு விபத்தை அறிந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் அவர்களது டுவிட்டர் பக்கத்தில், “கேரளா மாநிலம் மலப்புரம் அருகே நடந்த படகு விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு வருந்துகிறேன். அந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்தனை செய்கின்றேன்” என்று இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.