ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!!  டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!!

Photo of author

By Sakthi

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!!  டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!!

Sakthi

Today's match of IPL series!! Chennai team clash with Delhi team!!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!!  டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி எதிர் வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெறும் முனைப்பில் இன்று களமிறங்கவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடி வருகின்றது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆடிய கடைசி போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை சாதாரணமாக சேஸ் செய்து அந்த போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது.
டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் போட்டி இன்று இரவு 7.30.மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.