இந்த ராசிக்கு தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்! இன்றைய ராசி பலன் 25-09-2020 Today Rasi Palan 25-09-2020

Photo of author

By Kowsalya

இன்றைய ராசி பலன்25-09-2020
நாள்25-09-2020
தமிழ் மாதம்:
புரட்டாசி 09, வெள்ளிக்கிழமை.

நல்ல நேரம்:
காலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்:
பகல் 10.30 முதல் 12.00 வரை.

எம கண்டம்:
மதியம் 3.00 முதல் 4.30 வரை.

குளிகன்:
காலை 7.30 முதல் 9.00 வரை,

திதி:
நவமி திதி மாலை 06.44 வரை பின்பு வளர்பிறை தசமி.

நட்சத்திரம்:
பூராடம் நட்சத்திரம் மாலை 06.31 வரை பின்பு உத்திராடம்.

பிரபலாரிஷ்ட யோகம் மாலை 06.31 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாளில் ஏற்றம் தரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்தில் நல்ல மாற்றம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படலாம் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே  இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபார ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் வாய்ப்பு அமையும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் கவனமாக இருக்கவேண்டிய நாளாக அமைய இருக்கிறது. வாகன ரீதியான பயணங்களின் பொழுது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மூலம் ஆதாயம் காணலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சினையால் மன உளைச்சல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அமையும்.

துலாம்

துலா  ராசிக்காரர்களே இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் எதிர்பாராத நபர்கள் மூலம் எதிர்பாராத விஷயங்கள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. திடீர் தனவரவு குடும்பத்தில் இருப்பவர்களையும் உங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிள்ளைகளின் ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் உடல்ரீதியான பிரச்சனைகளை சரிசெய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுமானவரை கவனமாக இருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த படி ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவற்றில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே  இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும்.