இன்றைய வெள்ளி விலை நிலைமை !!

0
81
Today's silver price situation !!
Today's silver price situation !!

இன்றைய வெள்ளி விலை நிலவரம்!!

இந்தியாவில் வெள்ளியின் விலையானது சர்வதேச விலையை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்தும் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படும். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, சர்வதேச விலை அப்படியே இருந்தால் வெள்ளியின் விலை அதிக அளவில் அதிகரிக்கும். இந்நிலையில் இன்று வெள்ளி விலையானது சந்தை நிலவரப்படி நேற்றைய விலையை விட சற்று அதிகரித்து காணப்படுகிறது.

இந்த வாரம் முழுவதும் வெள்ளி விலையானது ஏற்ற இறக்கதில் தான் இருக்கிறது. இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 74.40 ஆகவும் 10 கிராம் வெள்ளி விலை ரூபாய் 744 ஆகவும் 1 கிலோ வெள்ளி விலை ரூபாய் 74400 ஆகவும் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் இன்றைய விலை  நேற்றைய விலையைக் காட்டிலும் 500 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.74,400 ஆகவும், மும்பையில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.69,500 ஆகவும், டெல்லியில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.69,500 ஆகவும், கொல்கத்தா மற்றும் பெங்களூரில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.69,500 ஆகவும், கேரளா, புனே, அகமதாபாத், ஜெய்பூர் ஆகிய மாநிலங்களில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய் 69,500 ஆகவும் விற்கப்படுகிறது.

author avatar
Preethi