32 ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ஆம் தேதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு ஆக்கி போட்டியில் நேற்றைய தினம் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் எதிர்கொண்டனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் காலிறுதி சுற்றில் சென்றடைய முடியும் என்ற சூழலில் இந்தியா இருந்தது. இந்தப் போட்டியின் முதல் மூன்று கால்மணி நேர போட்டியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
நெருக்கடியான இந்த சூழ்நிலையில், வாழ்வா சாவா என்ற நிலையில் இருந்த இந்திய அணியில் 57 ஆவது நிமிடத்தில் வீராங்கனை நவ்நீத் கவூர் ஒரு கோல் அடித்து அயர்லாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இதன் காரணமாக, போட்டி நேர இறுதியில் இந்தியா 1 இருக்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி அடைந்தது. இதன் காரணமாக இந்திய மகளிர் ஹாக்கி அணியின் காலிறுதிக்கு செல்லும் கனவு நனவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.