டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் ஹாக்கி அணி வரலாற்று சாதனை!! பதக்கப் பட்டியலில் பி.வி. சிந்து!!

Photo of author

By Preethi

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் ஹாக்கி அணி வரலாற்று சாதனை!! பதக்கப் பட்டியலில் பி.வி. சிந்து!!

டோக்கியோவில் நடந்துகொண்டே இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் பத்தாவது நாளான இன்றும் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை கால்இறுதியில் 10 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது இதன் மூலம் இந்தியாவின் மகளிருக்கான ஹாக்கி ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

மேலும் இன்று மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை டியூட்டி சந்த் தனது சீசனின் சிறந்த நேரத்தை பதிவு செய்துள்ளார் அவர் 23.85 வினாடிகளில் தனது ஓட்ட நேரத்தை முடித்துள்ளார். ஆனால் அரையிறுதிக்கு அவரால் தகுதி பெற முடியாமல் கடைசி இடத்தை பிடித்தார். ஆண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர்களான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் சஞ்சீவ் ராஜ்புத் ஆகியோர் போட்டியின் மூன்று நிலைகளுக்கு இறுதி தகுதி பெற முடியாமல் போனதால் இந்தியா மற்றொரு ஏமாற்றத்தை பெற்றது.

பிவி சிந்து வெண்கல பதக்கத்துடன் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் சேர்க்கப்பட்டார். மேலும் ஒரு கிலோ தட்டு எறிதல் போட்டியில் இறுதி கட்டத்தில் உள்ள கமல் பிரீட் கவூர் மீது இந்தியா நம்பிக்கையுடன் இருக்கிறது.
இன்று மேலும் இந்திய வீரர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகள்:
மதியம் 1.30 மணிக்கு மகளிருக்கான தட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை கமல் பிரீட் கவூர் பங்கேற்க உள்ளார்.
மாலை 4.30 மணிக்கு உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டி நடக்க உள்ளது.