மக்களை எச்சரித்த முதல்வர்! விதிமீறினால் மீண்டும் பழைய நிலை தான்!

0
73

மக்களை எச்சரித்த முதல்வர்! விதிமீறினால் மீண்டும் பழைய நிலை தான்!

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் இந்த தொற்றிலிருந்து மீண்டு வர பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.ஆறு மாதம் காலத்திற்கு மக்கள் விழிப்புணர்வுடன் காணப்பட்டாலும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு கொரோனா தொற்று அதிகமாக பரவ ஆரம்பித்து மீண்டும் ஊரடங்கு போடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இந்நிலையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்த பெருமளவு சிரமப்படுகின்றனர்.

அதனையடுத்து ஊரடங்கானது இரு மாதம் காலமாக போடப்பட்டு தற்போது தான் தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.இச்சூழலில் இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாவது அலை அதிவேகமாக பரவக்கூடும் என்றும் அதன் தாக்கமும் அதிகமாக காணப்படும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.இக்காரணத்தினால் முதல்வர் மக்களை எச்சரித்து பேட்டி ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது,அதிகளவு மக்கள் தொகை உள்ள நாடுகளில் கொரோனா தொற்றானது அதிகளவிலேயே பரவக்கூடும்.அத்தொற்று அதி வேகத்தில் பரவினாலும் அதனை கட்டுபடுத்தும் பொறுப்பானது அனைத்து அரசாங்கத்திற்கும் உள்ளது.அந்தவகையில் தற்போது தான் மக்கள் நலன் கருதி ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது.அவ்வாறு அமல்படுத்தியதில் மக்கள் வாழ்வாதாரம் நடத்துவதற்கே கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது.ஆனால் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும்,அதிகளவும் கூட்டம் கூடுகின்றனர்.

இவ்வாறு விதிமுறைகளை மீறி நடப்பதினால் பல பகுதிகளில் தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது.அவ்வாறு அதிகமாக தொற்று காணப்படும் பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்ற அம்மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் மக்கள்,ஊரடங்கு போடப்படும் நிலைக்கு அரசாங்கத்தை தள்ளி விடாதீர்கள் என கடுமையாகவே கூறுகிறேன் என்றும் முதல்வர் எச்சரித்தார்.மேலும் மக்கள் மிகவும் பாதுகாப்புடனும்,முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி இன்றுவரை செலுத்தி கொள்ளாதவர்கள் போட்டுக்கொள்ள முன் வர வேண்டும் என்றும் கூறினார்.

அத்தோடு பல தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட முன் வந்துள்ளனர் அது பாரடிற்குரியது என்றும் கூறினார்.முதல்,இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாவது அலை மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.அவ்வாறு மூன்றாவது அலை பரவ நேர்ந்தாலும் அதனை கட்டுப்படுத்த அனைத்து மருத்துவசதிகளையும் அரசாங்கம் முன்னேற்பாடு செய்து வைத்துள்ளது என்றும் கூறினார்.தேவைக்கேற்ப மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வாருங்கள்.மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.இந்த வீடியோ பாதிவானது மக்களை விழிப்புணர்வுடன் செயல்பட என்று அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.