விரைவில் அகற்றப்படுகிறது சுங்கச்சாவடிகள்! மத்திய அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்!

0
106

நாடு முழுவதுமிருக்கின்ற சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.

டெல்லியில் நடந்த சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் உச்சிமாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த 2019 ஆம் ஆண்டு அனைத்து கார்களுக்கும் தொழிற்சாலைகளில் நம்பர் பிளேட் பொருத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்சமயம் சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு கட்டண வசூல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றோம் என கூறியுள்ளார் நிதின் கட்கரி.

ஆனாலும் இதில் ஒரே ஒரு சிக்கல்தான் இருக்கிறது சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தப்பிச்செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க எந்த விதமான வழி வகையுமில்லை அதற்கான வழியையும் சட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

நம்பர் பிளேட் மூலமாகவே சுங்க கட்டணம் வசூல் செய்யும் விதத்தில் பிரத்தியேக நம்பர் பிளேட்டுகளை பொருத்த அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார் நிதின் கட்கரி.

தற்போதைய நிலவரத்தினடிப்படையில் சுங்க கட்டணத்தில் 97 சதவீதம் அதாவது 40,000 கோடி பாஸ்டேக் மூலமாக வசூல் செய்யப்படுகிறது. மீதம் இருக்கக்கூடிய 3 சதவீதம் மட்டுமே நேரடி கட்டணமாக செலுத்தப்படுகிறது.

பாஸ்டாக் இருப்பதால் வாகனங்கள் சுங்கச்சாவடியில் 47 வினாடிகள் மட்டுமே காத்திருந்தால் போதுமானது. 1 மணி நேரத்தில் 260 வாகனங்கள் பாஸ்டேக் மூலமாக கட்டணம் வசூலிக்கப்பட்டு சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன என்று கூறியுள்ளார்.