பட்டாசு விபத்தா..?? தகவல் தெரிவிக்க புதிய நடைமுறை..!!

0
166

சிவகாசியில் பட்டாசு விபத்து ஏற்பட்டால் மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிவகாசி என்றாலே பட்டாசும், தீப்பெட்டியும் தான் முதலில் நினைவில் வரும். சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. அங்குள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்புடனே இயங்கி வருகிறது. ஊழியர்களும் பாதுகாப்புடன் தான் வேலை செய்து வருகின்றனர். ஆனாலும் சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்துகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இந்நிலையில் சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டால் மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தொழிற்சாலைகளில் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் 1800 425 6743 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வேலுமணி அறிவித்திருக்கிறார்.

Previous articleஅமேசான் செயலியில் தமிழ்மொழி இணைப்பு:!! உலகறியும் தமிழ்மொழியின் உன்னதம்!!
Next articleஇந்தியாவில் குறைந்து வரும் கொரோனாவின் வேகம்!!