சுங்கவரி கட்டணத்தைக் முறைப்படுத்த வேண்டும்?
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி நிருபர்களிடம் பேட்டியளித்தார் அதில்.
அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்பட்ட தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தில் 5 ஆண்டுகள் அல்லது ஏழு ஆண்டுகள் மட்டும் தான் சுங்க வரி வசூலிக்க வேண்டும் ஆனால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எடுத்துக்கொண்டால் கடந்த 12 ஆண்டுகளாக வசூலித்து வருகின்றனர்.
அந்த சாலையின் மொத்த செலவை 545 கோடி தான் இருக்கும் ஆனால் இதுவரை சுங்க வரியாக 1100 கோடி வரை வசூலித்து விட்டு இன்னும் 300 கோடி வசூலிக்க வேண்டும் என சொல்கின்றனர்.
இந்த சாலையில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வாகனங்கள் செல்கிறது என்றால் அவர்கள் கணக்கில் வெறும் பத்தாயிரம் வாகனங்கள் மட்டும் தான் வரும் மீதி 40 ஆயிரம் வாகனங்களுக்கு சுங்க வரியை கணக்கில் காட்டாமல் எடுத்துக்கொள்கின்றனர் அதனால் சுங்க வரி வசூலில் மிகப்பெரிய மோசடி நடக்கிறது.
எனவே இதுபோன்ற சுங்க வரி வசூலிக்கும் சுங்கச்சாவடிகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் மூட வேண்டும் என அவர் கூறினார்.