கணிசமாக விலை உயர்ந்து விற்கப்படும் தக்காளி !! விவசாயிகள் மகிழ்ச்சி !

0
214

தமிழகத்தில் அதிகமாக தக்காளி விளைவிக்கும் மாவட்டங்களில் தர்மபுரியும்  ஒன்றாக விளங்குகிறது. தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் விற்பனையாகும் தக்காளியின் விலை, சற்று கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர்களில் சாகுபடி செய்யும் தக்காளியானது, மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு சேலம் ,ஈரோடு ,கோவை ,கேரளா ,கர்நாடகா போன்ற பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த மாதங்களாக சந்தையில் கிலோ 28 எடை கூடிய தக்காளியின் விலை ரூ.500-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 550 கணிசமாக உயர்ந்து விற்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் சந்தைக்கு தக்காளியின் வரத்து குறைந்துள்ளதன் காரணமாக ஒரு கூரை தக்காளியின் விலை 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது:

வெகு நாட்களுக்குப் பின்பு ,தக்காளியின் விலை உயர்ந்து விற்கப்படுவனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Previous article1940- பின் கண்டெடுக்கப்பட்ட புதிய கல்மரம் !!
Next articleசேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு !! இதை செய்யாவிட்டால் இனி ரேஷன் கார்ட் செல்லாது !!