உடலில் ஆடும் சதைகளை குறைக்கும் தக்காளி!! தோலும் விதையும் நீக்கி இப்படி குடிங்க.. ஒரே மாதத்தில் ஊளைச்சதைக்கு டாட்டா காட்டிடலாம்!!

Photo of author

By Divya

உடலில் ஆடும் சதைகளை குறைக்கும் தக்காளி!! தோலும் விதையும் நீக்கி இப்படி குடிங்க.. ஒரே மாதத்தில் ஊளைச்சதைக்கு டாட்டா காட்டிடலாம்!!

Divya

நம் உடல் கட்டுக்கோப்பாக இருந்தால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும்.உடலில் கொழுப்பு,ஊளைச்சதைகள் அதிகரித்தால் உயிருக்கு ஆபத்தான நோய்கள் அசால்ட்டாக நம்மை நெருங்கிவிடும்.

உடலில் அதிகப்படியான சதைகள் உருவாக காரணம் நாம் பின்பற்றும் பயனற்ற உணவுமுறை பழக்கம்.எண்ணெய்,கொழுப்பு நிறைந்த உணவுகள்,ஜங்க் புட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நமது உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகிறது.உடலில் உள்ள ஊளைச்சதைகளை குறைத்து ஒல்லியான தோற்றத்தை பெற தக்காளி பழத்தை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி பழம் – இரண்டு
2)சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி
3)மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி
4)உப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

நீங்கள் முதலில் இரண்டு பழுத்த தக்காளி பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதை தண்ணீரில் கழுவிவிட்டு பாத்திரம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து இந்த பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.தக்காளி தோல் உரிந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு தக்காளியை ஆறவைக்க வேண்டும்.பின்னர் தக்காளி பழத்தின் தோலை உரித்தது நீக்கிவிட்டு சதைப்பற்றை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

இதற்கு அடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி தக்காளியை மைய்ய அரைக்க வேண்டும்.அதன் பின்பு ஒரு வடிகட்டி கொண்டு தக்காளி சாறை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை தொடர்ந்து பாத்திரம் ஒன்றை எடுத்து அரைத்த தக்காளி சாறை அதில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத் தூள்,கால் தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து கலந்துவிடவும்.

அதற்கு அடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி அடுப்பில் வைத்து குறைந்த தீயில் சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த தக்காளி சாறை கிண்ணத்திற்கு மாற்றி குடிக்க வேண்டும்.

தினமும் காலை நேரத்தில் இந்த தக்காளி சாறு பருகினால் முப்பது தினங்களின் உடலில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்துவிடும்.