தமிழகத்தில் மழை தொடரும்!! வானிலை மையம் எச்சரிக்கை!!

Photo of author

By Sakthi

Rain alert: நாளை,வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஃபெஞ்சல் புயல் காரணமாக வட தமிழக பெரும் அளவில் பாதிப்பு அடைந்தது. இந்த நிலையில், மீண்டும் வங்கக் கடலில் ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலு பெறாமல் இருந்தது.

லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதி நோக்கி நகர்ந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்று விட்டது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை கொடுத்து இருக்கிறது. அதாவது,நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும்.  இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் நோக்கி நகரும் என  அறிவித்து இருக்கிறது.

எனவே நாளை மறுநாள்  டிசம்பர்-16 அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,17-ந் தேதி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால்,நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை,  போன்ற டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

வட மாவட்டங்களில் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, செங்கல்பட்டு கனமழை பெய்யும். மேலும் டிசம்பர்-18 ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.