நாளையும் இந்த மாவட்டங்களில் எல்லாம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

Photo of author

By Hasini

நாளையும் இந்த மாவட்டங்களில் எல்லாம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. அதன் காரணமாக சென்னை மற்றும் பல மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில பல மாவட்டங்களில் விடுமுறை அளித்து வருகின்றனர். இன்று சென்னைக்கு அருகே உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டித் தீர்த்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது வரை சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சில முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

சென்னை மட்டுமின்றி சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். ஏற்கனவே நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.