சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! இன்ப வெள்ளத்தில் மாணவர்கள்!

Photo of author

By Rupa

சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! இன்ப வெள்ளத்தில் மாணவர்கள்!

Rupa

Updated on:

Tomorrow is a holiday for schools in Salem district! Students in a flood of joy!

சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! இன்ப வெள்ளத்தில் மாணவர்கள்!

ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த உள்ளூர் பண்டிகைகளுக்கு ஏற்ப விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஆடி 18 என்பதால் மக்கள் கோவிலுக்கு சென்று வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.அதுமட்டுமின்றி நாளை  சுதந்திர போராட்ட வீரர்  தீரன் சின்னமலை நினைவு நாள் என்பதும் குறிபிடத்தக்கது .இந்த சிறப்பு தினங்களை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளனர்.அந்த வகையில் நாளை மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி விடுமுறை அளித்துள்ளனர்.அதேபோல சேலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் நாளை  ஒரு நாள் மட்டும் செயல்படாது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய வருகின்ற 17ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.எனவே நாளை விடுமுறைக்கு, வருகின்ற 14ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறையானது அவசர அலுவலகப் பணிகளை கவனிக்கும் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களுக்கு பொருந்தாது. அங்கு குறிப்பிட்ட சில பணியாளர்களோடு வழக்கம் போல் பணிகள்  நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். நாளை விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.