இந்த மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை!!  வெளிவந்த ஹேப்பி நியூஸ்!!

0
138
Tomorrow is a local holiday for this district!! Happy News!!
Tomorrow is a local holiday for this district!! Happy News!!

இந்த மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை!!  வெளிவந்த ஹேப்பி நியூஸ்!!

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி ஆகும். நாளை ஆடி மாதத்தின் முதலாவது வெள்ளிக் கிழமை மிகவும் விசேஷமான நாளாகும்.  அந்த நாளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் செய்வது வழக்கம். ஆடி மாதம் முழுவதிலும் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனை நடைபெற உள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. அன்று புகழ்பெற்ற அம்மன் தலங்களில் சிறப்பாககொண்டாடப் பட உள்ளது. இந்த நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் தலமாகும்.

அங்கு நாளை ஆடிபூர விழாவினை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஆடிபூர திருவிழா கொண்டாடப் படுகிறது. ஆடி மாதத்தை முன்னிட்டு ஆடிபூர விழாவில் கஞ்சி வார்த்தல்,அம்மனுக்கு பாலாபிசேகம் ஆகிய இரு நிகழ்ச்சிகள் அடிகளார் முன்னிலையில் நடைபெற உள்ளது.

பாகுபாடின்றி பக்தர்கள் கொண்டு வரும் கஞ்சியை தொட்டிகளில் ஊற்றி வரிசையில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு ஆடிபூர விழா நாளை அங்கு கொண்டாட பட உள்ளதால் அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடு செய்வதற்காக அடுத்த மாதம் 5-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Previous articleசக்கரத்தில் நசுங்கி உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்!! அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!!
Next articleஅதிக உப்புச்சத்து சிறுநீரக தொற்று உடல் சூடு பித்தம் நீங்க அற்புதமான வைத்தியம்!!