கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!! மாணவர்களுக்கான அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!! மாணவர்களுக்கான அறிவிப்பு!!

CineDesk

Tomorrow is the last day to apply in colleges!! Notice to Students!!

கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!! மாணவர்களுக்கான அறிவிப்பு!!

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் முடிவுற்றது. இந்த பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் கடந்த 8 ம் தேதி வெளியானது. தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் வரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இந்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவுகள் இணயதளம் மூலம்,தேர்வு முடிவுகள் வெளியான மே 8ம் தேதி முதல் தொடங்கியது.

இந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் விண்ணப்பப் பதிவுகள் நாளையுடன் முடிவடைகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் http://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வுகள்,  மே 25ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறப்பு பிரிவினர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

மே 30ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வும், ஜூன் 12ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வும்  நடைபெறும். மேலும் ஜூன் 22 ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப் படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.