புதிய வகை நோய் தோற்று வராமல் நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் நாளை ஆலோசனை!

0
113

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது, ஆனால் தற்போது உருமாறி இருக்கின்ற ஒமிக்ரான் தொடர்பான அச்சம் இன்னும் விலகவில்லை .இந்த சூழ்நிலையில், வருகின்ற 15ஆம் தேதி தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு முடிவு பெற இருக்கிறது.

ஆகவே தமிழ்நாட்டில் நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உள்ளிட்டவை நீட்டிப்பு தொடர்பாக நாளை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10 .30 மணி அளவில் நடைபெற இருக்கிறது என்று தெரிகிறது.

இந்த புதிய வகை நோய் தொற்று அச்சுறுத்தல் இருக்கும் சூழ்நிலையில், ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிப்பு தொடர்பாகவும், இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதோடு கூடுதலான கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தலாமா? அல்லது தற்போது இருக்கின்ற நிலையில் தொடரலாமா என்பது தொடர்பாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருக்கிறார்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous articleபருவமழை பாதிப்பு! 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!
Next articleதமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!