பாத்ரூமில் அதிகமாக மஞ்சள் கறை படிந்திருக்கா? இந்த ஒரு பொருள் போதும்.. தேய்க்காமலே கறை நீங்கிவிடும்!!

Photo of author

By Divya

உங்களில் பலருக்கு பாத்ரூமில் படிந்துள்ள மஞ்சள் கறையை போக்குவது பெரும் சவாலாக இருக்கும்.எத்தனை முறை பாத்ரூமை கழுவி சுத்தம் செய்தாலும் மஞ்சள் கறை மட்டும் நீங்கியபாடில்லை என்று எண்ணுபவர்கள் இந்த டிப்ஸை பின்பற்றி பலனடையுங்கள்.

டிப் 01:

1)பேக்கிங் சோடா
2)நல்லெண்ணெய்
3)லெமன் சாறு
4)சோப்

ஒரு அகலமான பிளாஸ்டிக் பாக்கெட்டில் முக்கால் பாகம் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்,அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை முழுவதுமாக பிழிந்து கொள்ளவும்,

அதற்கு அடுத்து ஒரு துண்டு சோப்பை கரைத்து அதில் ஊற்றி நன்றாக கலந்து பாத்ரூம் முழுவதும் ஊற்றிவிடவும்.

10 முதல் 15 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் கொண்டு பாத்ரூமை சுத்தம் செய்தால் மஞ்சள் கறை முழுமையாக நீங்கிவிடும்.

டிப் 02:

1)சலவைத் தூள்
2)பேக்கிங் சோடா
3)ஹார்பிக்

ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் தண்ணீர் ஊற்றி மூன்று தேக்கரண்டி சலவைத் தூள் அதாவது வாஷிங் பவுடர்,மூன்று தேக்கரண்டி போக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி ஹார்பிக் சேர்த்து மீண்டும் கலந்து விடவும்.பிறகு இதை பாத்ரூமில் ஊற்றி சிறிது நேரம் ஊறவிடவும்.பிறகு பாத்ரூம் பிரஷ் கொண்டு தேய்த்தால் கறைகள் நீங்கி பளிச்சிடும்.

டிப் 03:

1)டீ தூள் வேஸ்ட்
2)பேக்கிங் சோடா

20 கிராம் டீ தூள் வேஸ்ட் மற்றும் மூன்று தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து கலந்து விடவும்.பிறகு அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊறவிடவும்.

இதை பாத்ரூமில் ஊற்றி சிறிது நேரம் ஊறவிடவும்.பிறகு பாத்ரூம் பிரஷ் கொண்டு தேய்த்தால் கறைகள் நீங்கி பளிச்சிடும்.