நல்ல படங்களை கோட்டை விட்டு மொக்கை நடிகர்களாக வலம் வரும் டாப் 5 ஹீரோக்கள்!!
ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களாக,வளர்ந்து வரும் நடிகர்களாக திகழ்ந்த சிலர் தாங்கள் வளர்ந்து விட்டோம் என்று எண்ணி தேடி வந்த நல்ல வெற்றி படங்களின் வாய்ப்பை உதறிவிட்டு நடித்தால் மொக்கை படத்தில் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து மார்க்கெட்டை இழந்தனர்.இவ்வாறு தாங்கள் செய்த சிறு தவறால் திரைத்துறையில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இன்று வரை வெற்றி படங்களை கொடுக்க திணறி வரும் நடிகர்களின் விவரம் இதோ.
1.ஜெய்
கடந்த 2002 ஆம் ஆண்டு ‘பகவதி’ என்ற படத்தில் விஜய்க்கு தம்பி ரோலில் நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.அதனை தொடர்ந்து சென்னை 600028,சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.அந்த காலகட்டத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்த ஜெய்க்கு முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விண்ணைத்தாண்டி வருவாயா,சிவா மனசுல சக்தி,ராட்சசன் உள்ளிட்ட பட வாய்ப்புகளை தவற விட்டு கோவா,கனிமொழி,வாமனன் உள்ளிட்ட மொக்கை படங்களில் நடித்து வந்ததால் நல்ல பட வாய்ப்புகள் தேடி வந்தும் அதனை கண்டு கொள்ளாமல் விட்டதால் இன்று வரை திரையுலகில் தடுமாறி வருகிறார்.
2.சாந்தனு
பிரபல இயக்குநரும்,நடிகருமான பாக்யராஜ் அவர்களின் மகனான சாந்தனு கடந்த 1998 ஆம் ஆண்டு ‘வேட்டிய மடிச்சு கட்டு’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து சக்கரக்கட்டி,ஆயிரம் விளக்கு,கண்டேன்,அம்மாவின் கைபேசி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.இன்று வரை நடித்து வரும் இவர் தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதிக்க வேண்டுமென்று போராடி வருகிறார்.ஆனால் பாய்ஸ்,காதல்,சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தவற விட்டதால் இன்று வரை திரையுலகில் போராடி வருகிறார்.
3.பிரசாந்த்
90 காலகட்டங்களில் முன்னணி ஹீரோவாக கலக்கியவர்.கடந்த 1990களில் வெளிவந்த ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து செம்பருத்தி,ஜீன்ஸ்,ஜோடி,காதல் விதை உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தார்.இப்படி பல வெற்றி படங்களை கொடுத்து உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்த பிரசாந்த் அவர்கள் செய்த சிறு தவறால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை இழந்து தமிழ் திரையுலகில் வெற்றி படங்களை கொடுக்க தடுமாறி வருகிறார்.அவர் செய்த தவறு என்னவென்றால் 2000 ஆம் ஆண்டில் வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ அதற்கு பின் வெளியான ‘மின்னலே’ உள்ளிட்ட வெற்றி பட வாய்ப்புகளை விட்டு விட்டு சாக்லேட்,பொன்னர் சங்கர்,ஆய்தம் உள்ளிட்ட மொக்கை படங்களில் நடித்து தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டார்.
4.அப்பாஸ்
கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து விஐபி,பூச்சுடவா,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார்.2000 ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த நடிகர்களில் ஒருவராக இருந்த அப்பாஸ் சரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கோட்டை விட்டார்.ஜீன்ஸ்,காதலுக்கு மரியாதை உள்ளிட்ட நல்ல பட வாய்ப்புகளை உதறிய இவர் மொக்கை படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
5.சிம்பு
சர்ச்சை நடிகரான இவர் 1984 ஆம் ஆண்டு வெளியான ‘உறவை காத்த கிளி’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் அழிவதில்லை’ என்ற படத்தின் ,மூலம் கதாநாயகனாக அறியப்பட்டார்.அதனை தொடர்ந்து கோவில்,வல்லவன்,மன்மதன்,காளை,விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ படத்தை தவற விட்டார்.இதனை தொடர்ந்து இது நம்ம ஆளு,அன்பானவன் அசராதவன் அடங்காதவன்,வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட மொக்கை படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை சரிய வைத்து கொண்டார்.