அடடே இவ்வளவு நாளா தெரியாம போச்சே! Top 5 secret and cool websites in 2021

Photo of author

By Kowsalya

2021 இல் உள்ள டாப் சீக்ரெட் வெப்சைட்ஸ் பயனுள்ள வெப்சைட். இந்த பதிவில் 2021 ஆம் ஆண்டு நமது அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயன்படுத்தக்கூடிய ஒரு ரகசியமான வலைதளங்களை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். இதற்கு எவ்விதமான அப்ளிகேஷனும் தேவை இல்லை. உங்களுடன் கூகுள் பிரவுசர் இருந்தாலே போதும்.

 

1. Https://www.sendgb.com/

 

இந்த வெப்சைட் அதிகமான அளவு ஜிபி பைல்களை அனுப்ப உதவுகிறது. உங்களிடம் Gb அளவு பைல்கள் அதாவது ஆடியோ வீடியோ பைல்கள் இருந்தால் அதை மற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப இந்த sendgb.com பயன்படுகின்றது. இந்த வெப்சைட்டுக்குள் சென்று செண்ட் மைல் அதை கிளிக் செய்து உங்களது போனில் உள்ள ஜிபி அளவு பைல்களை Select செய்து கொள்ளுங்கள். பின் உங்களது மின்னஞ்சல் முகவரியும், யாருக்கு நீங்கள் அனுப்ப போகிறீர்களோ அவர்களது மின்னஞ்சல் முகவரியும் கேட்கும் அதையும் type செய்து கொள்ளுங்கள். நீங்கள் அனுப்பும் பைலுக்கு பாஸ்வேர்ட் கூட நீங்கள் இதில் செட் செய்து கொள்ளலாம்.

அதேபோல் எத்தனை நாளுக்குள் இந்த Mail அழிக்கப்பட வேண்டும் என்பதையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

 

2.Fast.com

 

உங்கள் போனில் Mobile Data மற்றும் WiFi எந்த Mbps அளவு speed வருகிறது என தெரிந்து கொள்வதற்காக உதவுகிறது.இதற்கு உங்கள் போனில் Mobile Data On- இல் இருக்க வேண்டும். அதன்பிறகு இந்த வெப்சைட்க்கு சென்றால் உங்கள் Mobile Data எந்த ஸ்பீடு Mbps வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.அதே போல் WiFi Mbps speed அளவையும் இதில் தெரிந்து கொள்ளலாம்.

 

3. resizepixel.com

 

இந்த வெப்சைட்டில் உங்களது Photo pixel உடையாமல் Compress செய்து கொள்வதற்கு உதவுகிறது. இதில் நீங்கள் எந்த அளவு Compress செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களோ? அந்த அளவு நீங்கள் தந்து Compress செய்து கொள்ளலாம். பிக்சல் கண்டிப்பாக உடையாது. நீங்கள் எந்த அளவிற்கு போட்டோவை Zoom செய்து பார்த்தாலும் தெளிவாக போட்டோ இருக்கும். இதில் ஏகப்பட்ட ஆப்ஷன்ஸ் இருக்கும். அதற்கேற்றவாறு நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

4. 1ty.me

 

இந்த வெப்சைட் நீங்கள் யாருக்கு ரகசியமாக மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களோ? அவர்களுக்கு இந்த வெப்சைட் மூலம் நீங்கள் ரகசியமாக மெசேஜை அனுப்பலாம். இந்த வெப்சைட்டுக்குள் சென்றால் கீழே மெசேஜ் டைப் செய்யக் கூடிய பாக்ஸ் இருக்கும் அதில் நீங்கள் உங்களது மெசேஜ் டைப் செய்து கொள்ளலாம். மேலும் நீங்கள் அனுப்பிய மெசேஜ் அவர்கள் படித்து விட்டார்களா? என்பதை தெரிந்துகொள்ள Notify me என்ற option இருக்கும். அதில் Mail Id கேட்கும் அந்த Mail Id கொடுக்க வேண்டும். பின் கீழே Generate link இருக்கும். அதனை கிளிக் செய்தால் லிங்க் உருவாகும் அதை நீங்கள் copy செய்து யாருக்கு அனுப்ப வேண்டுமோ? அந்த லிங்கை whatsapp or Message மூலம் அனுப்பலாம். அதை அவர்கள் click செய்து open செய்தால் View Note இருக்கும். அதை அவர்கள் படித்து முடித்தவுடன் அது அழிந்து விடும். அவர்கள் மறுபடியும் பார்க்க முடியாது.

 

5.duckduckgo.com

 

நாம் எப்பொழுதுமே ஒன்றை தெரிந்து கொள்ள Search செய்வதற்கு Google நாடி செல்வோம். ஆனால் நாம் எதை search செய்தாலும் Google அதை track செய்து அதற்கேற்றவாறு நமக்கு Ads காண்பிக்கும். ஆனால் இந்த duckduckgo வெப்சைட்டில் நீங்கள் எதை type செய்தாலும் track செய்யப்படாது. அதே போல் இந்த வெப்சைட்டில் இருந்து வெளியே வந்தால் history இருக்காது.