1) சாம்சங்:
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்சி எஸ்23 ஸ்மார்ட்போனானது 2023ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்சி எஸ்23 சிறப்பம்சங்கள்:
– 8கே திறனுடைய வீடியோ ரெக்கார்டிங் வசதி.
– யூஎஃப்எஸ் 4.0 உடன் வேகமான சார்ஜிங் வசதி.
– வயருடன் கூடிய 25W சார்ஜிங் வசதி/ 10W வயர்லெஸ் சார்ஜிங் வசதி.
– ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி.
2) ரெட்மி:
ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனை 2023ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதியன்று இந்தியா உட்பட உலகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் சிறப்பம்சங்கள்:
– 6.67 இன்ச் எஃப்ஹெச்டி + ஓஎல்இடி 120 ஹெட்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
– 120W சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.
– 200 மெகா பிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது.
– மீடியா டெக் டைமென்சிட்டி 1080 எஸ்ஓசி.
3) ஐகியூ:
ஐகியூ நிறுவனம் தனது ஐகியூ 11 5ஜி ஸ்மார்ட்போனை 2023ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதேசமயம் இந்த மொபைலின் ப்ரோ வெர்ஷன் வெளியீடு சற்று தாமதக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஐகியூ 11 5ஜி சிறப்பம்சங்கள்:
– 6.78 இன்ச் அமோல்டு டிஸ்பிளே 144 ஹெட்ஸ் டிஸ்பிளே.
– குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்.
– 120W சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.
– 50 மெகாபிக்ஸல் முதன்மை சென்சார் உள்ளது.
4) விவோ:
விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ்90 தொடர்களை 2023ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் எக்ஸ்90, எக்ஸ்90 ப்ரோ மற்றும் எக்ஸ்90 ப்ரோ ப்ளஸ் ஆகியன அடங்கும்.
விவோ எக்ஸ்90 தொடரின் சிறப்பம்சங்கள்:
– ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்செட்.
– 50 எம்பி முதன்மை கேமராவுடன் ஐஎம்எக்ஸ்989 சென்சார் உள்ளது.
– 6.78 இன்ச் 120 ஹெட்ஸ் எல்டிபி04 அமோல்டு டிஸ்பிளே உள்ளது.
– 80W சார்ஜிங் ஆதரவுடன் 4700 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.
5) ஒன்ப்ளஸ்:
ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது ஒன்ப்ளஸ் 11 ஸ்மார்ட்போனை 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்ப்ளஸ் 11 சிறப்பம்சங்கள்:
– குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 875 சிப்செட் உள்ளது.
– 6.5 இன்ச் அமோல்டு டிஸ்பிளே மற்றும் 120 ஹெட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது.
– 65W சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.
– 50 மெகாபிக்ஸல் முதன்மை சென்சார் உள்ளது.