டாப் ஹீரோஸ் இன் ஹிந்தி ரீமேக் படங்கள்!! லிஸ்ட்ல இந்த படம் கூடவா!!

Photo of author

By Gayathri

பில்லா :-

1978 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த டான் திரைப்படத்தின் ரீமேக் படம் தான் பில்லா. திரைப்படம் 2007 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் நடிப்பில் திரையிடப்பட்டது.

நண்பன் :-

2009 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் தான் நண்பன். இந்த திரைப்படம் 2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் தமிழில் வெளியானது.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் :-

2004 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான “வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.” படம், 2003 இல் வெளிவந்த இந்தி படமான “முன்னா பாய் எம்.பி.பி.எஸ்.”-ன் ரீமேக்.

கண்டேன் காதலை :-

இந்தியில் சூப்பர் ஹிட்டான “ஜப் வி மேட்” படத்தின் தமிழ் ரீமேக் “கண்டேன் காதலை” 2009 இல் வெளிவந்தது. பரத், தமன்னா நடித்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஒஸ்தி :-

2010-ல் சல்மான் கான் நடிப்பில் இந்தியில் வெளிவந்த “டபாங்” திரைப்படம் தமிழில் 2011 இல் “ஒஸ்தி” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சிம்பு நடித்த இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

சேட்டை :-

2011 இல் இந்தியில் வெளிவந்த “டெல்லி பெல்லி” படத்தின் ரீமேக் தான் 2013-ல் ஆர்யா நடிப்பில் வெளியான “சேட்டை”.

தாராள பிரபு :-

2012-ல் இந்தியில் வெளியான “விக்கி டோனர்” என்ற படத்தின் ரீமேக் தான் 2020 இல் வெளிவந்த “தாராள பிரபு” படம்.

உன்னை போல் ஒருவன் :-

2009 இல் வெளிவந்த கமலின் “உன்னைப்போல் ஒருவன்” நல்ல வரவேற்பை பெற்றது. இது 2008 இல் இந்தியில் வெளியான “எ வெனஸ்டே” என்ற படத்தின் ரீமேக்.