மலையாள டாப் ஹீரோ மோகன்லாலுக்கு ஜோடியாகும் தமிழ் நடிகை 

மலையாள டாப் ஹீரோ மோகன்லாலுக்கு ஜோடியாகும் தமிழ் நடிகை

தமிழ் திரையுலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை த்ரிஷா. ஆரம்பத்தில் ஒரு துணை நடிகையாக இருந்த திரிஷா இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான “லேசா லேசா” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

லேசா லேசா திரைப்படத்தில் ஆரம்பித்த இவருடைய திரைப்பயணம் விக்ரமுடன் சாமி,சூர்யாவுடன் மௌனம் பேசியதே,விஜய்யுடன் கில்லி போன்ற படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது முதல் முறையாக மோகன்லாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் தகவல் வெளியாகியுள்ளது.

மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ராம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நடிகை த்ரிஷா தமிழில் கடைசியாக 96 படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் இவர் நடித்த ஜானு என்ற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பெரிதும் பேசப்பட்டது. மேலும் இந்த படத்தில் த்ரிஷா நடிக்க போவது தெரிந்தவுடன் அனைவருக்கும் ஞாபகம் வந்தது 96 படம் தான்.

இந்த நிலையில் ‘ராம்’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.இந்த படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் பாபநாசம், தம்பி படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இப்படத்தை இயக்குகிறார்.த்ரில்லர் கதையான இதில் மோகன்லால், த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இப்படத்தில் முதல் முறையாக மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment