சமந்தா முதல் ஸ்ருதிஹாசன் வரை…உடல்நலக்குறைவால் அவதிப்படும் டாப் நடிகைகள் !

பிரபல தென்னிந்திய நடிகைகளான சமந்தா, நயன்தாரா, ஸ்ருதிஹாசன், பூனம் கவூர் மற்றும் இலியானா போன்ற நடிகைகள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.

சமந்தா:

சமந்தா முதல் ஸ்ருதிஹாசன் வரை...உடல்நலக்குறைவால் அவதிப்படும் டாப் நடிகைகள் !

தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான நடிகையான சமந்தா கடந்த அக்டோபர் மாதம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களை பேரதிர்ச்சியை ஆழ்த்தியது. நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மயோசிட்டிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக உருக்கமான பதிவுடன் தெரிவித்தார், இது அவரது ரசிகர்களுக்கு கவலையை அளித்தது. தற்போது அடிக்கடி அவரது உடல்நிலை மோசமாகிவிடுவதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.

நயன்தாரா:

சமந்தா முதல் ஸ்ருதிஹாசன் வரை...உடல்நலக்குறைவால் அவதிப்படும் டாப் நடிகைகள் !

லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான நடிகை நயன்தாராவிற்கு ஆண், பெண் என இருபாலின ரசிகர்களின் கூட்டமும் உள்ளது. இந்த வயதிலும் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும் இவரை கண்டு பொறாமை கொள்ளாத பெண்களே இல்லை என்றுகூட சொல்லலாம், மிக பிரபலமான மற்றும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையான இவர் தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, நயந்தாரா ஒரு மர்மமான தோல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அசைவ உணவு சாப்பிடும்போதும் மற்றும் மேக்கப் பயன்படுத்தும்போதும் அவரது தோலில் ஒவ்வாமை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ருதிஹாசன்:

சமந்தா முதல் ஸ்ருதிஹாசன் வரை...உடல்நலக்குறைவால் அவதிப்படும் டாப் நடிகைகள் !

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீங்கிய முகத்துடன் அவர் பதிவிட்டிருந்த புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராமில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டு தான் பிசிஓஎஸ் எனப்படும் ஹார்மோன் பிரச்சனையால் எதிர்கொள்ளும் சிக்கல்களை வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

பூனம் கவூர்:

சமந்தா முதல் ஸ்ருதிஹாசன் வரை...உடல்நலக்குறைவால் அவதிப்படும் டாப் நடிகைகள் !

நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த பூனம் கவூர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு போராடி வருகிறார். அவர் ஃபைப்ரோமியால்ஜியா எனும் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்திருந்தார். தற்போது இவர் கேரளாவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இலியானா:

சமந்தா முதல் ஸ்ருதிஹாசன் வரை...உடல்நலக்குறைவால் அவதிப்படும் டாப் நடிகைகள் !

ஒல்லி பெல்லி பாடல் மூலம் பல ரசிகர்களையும் கவர்ந்த பிரபல தென்னிந்திய நடிகை இலியானா பாடி டிஸ்மார்ஃபியா எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். உளவியல் சம்மந்தப்பட்ட இந்த நோயானது தங்களது உடல் அமைப்பு குறித்து மகிழ்ச்சியற்ற மனநிலையை உருவாக்கும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் தங்களிடம் உள்ள குறைகளை தேடிக்கொண்டு மகிழ்ச்சியை இழந்துவிடுவார்களாம்.

Leave a Comment