ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் கதிக்கியா பகுதியில் இருக்கின்ற தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த மாணவர்கள் ஒரு சிலர் சரியான சமயத்தில் படிப்பு கட்டணம் செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த படிப்பு கட்டணம் சரியான சமயத்தில் செலுத்தவில்லை என்று கூறி 34 மாணவர்களை அறை ஒன்றில் ஆசிரியர்கள் அடைத்து வைத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அவர்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு, குடிநீர் என எதுவும் கொடுக்கவில்லை, கழிவறைக்கு செல்லவும் அவர்களை அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சில மாணவர்கள் தங்களை பெற்றோருடன் தொலைபேசியில் பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
ஆனால் சரியான சமயத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக, உங்களை நாங்கள் பிடித்து வைத்திருக்கிறோம் என்று தெரிவித்து ஆசிரியர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
அதன் பிறகு பள்ளி அதிகாரிகள் மாணவர்களிடம் ஒரு நோட்டீசை கொடுத்து அதனை அவர்களுடைய பெற்றோரிடம் வாங்குமாறு தெரிவித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் பற்றி தெரிந்து கொண்ட பெற்றோரில் ஒரு சிலர் ஆத்திரம் கொண்டு பள்ளியின் வாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அவர்களில் ஒருவர் இணையதளம் மூலமாக முன்பே படிப்பு கட்டணம் செலுத்தி விட்டோம். ஆனாலும் தொழில்நுட்பக் கோளாறால் அந்த விவரங்கள் காட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.