ஆயுள் தண்டனை கைதிக்கு சித்திரவதை !உயர்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்!

Photo of author

By Jeevitha

ஆயுள் தண்டனை கைதிக்கு சித்திரவதை !உயர்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்!

Jeevitha

Torture to a life sentence prisoner !High officials suspended!

vellore:வேலூரில் உள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு சித்திரவதை. இதனால் மூன்று உயர் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.

ஒருவர் செய்த குற்றத்திற்கு தண்டிக்கும் முறை என்பது அவரை அந்த  தவறை மீண்டும் செய்ய கூடாது என  எண்ணி சிறையில் அடைப்பார்கள்.  ஏனென்றால் மீண்டும் ஒரு தவறு செய்தால் இது போன்ற தண்டனை அனுபவிக்க கூடும் என எண்ணி தவறு செய்யமாட்டார்கள்.

ஆனால் குற்றவாளிகள் திருந்த நினைத்தாலும் சில காவல்துறை அதிகாரிகள்  தனது சொந்த வேலைகளைச் செய்ய குற்றவளிகளை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டை பகுதியில் உள்ள சிவகுமார் என்பவர்  கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார்  இவருக்கு வயது 30.

இவர் வேலூர் சிறையில் உள்ள போது அங்குள்ள சிறை வார்டன்கள் இவரை டி.ஐ.ஜி. வீட்டு வேலைகள் செய்வதற்காக அழைத்து சென்றுள்ளார்கள். அப்போது சிவக்குமார்  டி.ஐ.ஜி. வீட்டில் உள்ள  பொருட்கள் , பணம். நகை என திருடி விட்டார் என கூறி அவரை  லாக்கப்பில் வைத்து சரமாரியாக அடித்து சித்திரவதை செய்து உள்ளார். இதனை அறிந்த அவரது அம்மா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால்  நீதிபதிகள் சி.பி.சி.ஐ.டி. மூலம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதன் விளைவாக  சிவக்குமாரை சேலம் சிறைக்கு மாற்றப்பட்டு, வேலூர்  சிறையில் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால்  உயர் துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரவில்லை என   கூறியது காரணமாக டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறு அலுவலர்களை நியமிக்கப்பட்டுள்ளது.