பணப்பரிவர்த்தனைக்கு பெரும்பாலான மக்கள் வங்கியை மட்டும் பயன்படுத்துகிறார்கள். ஏடிஎம்-ல் பணம் எடுக்க தெரியாதவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். குறிப்பாக வயதானவர்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்க மற்றவர்களையே நம்பி இருக்கிறார்கள். இதை தெரிந்துகொண்டுதான் சிலர் வயதானவர்களுக்கு பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து மோசடி செய்கிறார்கள்.
படித்தவர்கள், செல்போன் பயன்படுத்த தெரிந்தவர்கள், ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்கிறார்கள். இப்போதெல்லாம் Paytm, Google Pay, Phone pe போன்ற மொபைல் ஆப்கள் வந்துவிட்டது. எனவே, பெரும்பாலானோர் அதிலேயே பணங்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். ஆனால், இதை கையாள தெரியாதவர்கள் வங்கிகளுக்குதான் செல்ல வேண்டும்.
இந்நிலையில், இந்த மாதம் வங்கிகளுக்கு அதிக விடுமுறைகள் வருகிறது. ஏப்ரல் 1ம் தேதி ஆண்டு கணக்கு நிறைவு என்பதால் விடுமுறை. அடுத்து ஏப்ரல் 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி.. 14ம் தேதி தமிழ் வருட பிறப்பு, 18ம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 12 மற்றும் 26ம் தேதிகளில் இரண்டாவது மற்றும் 4வது சனிக்கிழமை போன்ற நாட்கள் விடுமுறை வருகிறது. மேலும், 6,13, 20, 27 தேதிகளில் ஞாயிற்றுகிழமைகள் வருகிறது. எனவே, இந்த மாதம் மொத்தம் 10 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே, காசோலை தொடர்பான பரிவர்த்தனைகள் செய்யும் இந்த விடுமுறை நாட்களை தெரிந்துகொண்டு போவது நல்லது.
இந்த வருடத்தில் எந்த மாதத்திலும் இவ்வளவு விடுமுறை வங்கிகளுக்கு வந்தது இல்லை. இந்த மாதம் 30 நாட்களில் 20 நாட்கள் மட்டுமே வங்கி செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.. அதேபோல், இந்திய அளவில் பார்த்தால் ஏப்ரல் 15ம் தேதி பெங்காலி புத்தாண்டு, 16ம் தேதி போஹக் பிஹூ, 21ம் தேதி கரியா பூஜா, 30ம் தேதி பசவ ஜெயந்தி என மொத்தம் 15 நாட்கள் விடுமுறை வருகிறது.