ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தீண்டல் இல்லை! தீர்ப்பை ரத்து செய்து அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்!

0
231
Touching the top of the dress is not sexual touching! Supreme Court quashes verdict
Touching the top of the dress is not sexual touching! Supreme Court quashes verdict

ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தீண்டல் இல்லை! தீர்ப்பை ரத்து செய்து அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்!

கடந்த 2014 ம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவருக்கு பல உணவுப் பொருட்களை சாப்பிடக் கொடுத்து, அதன் பிறகு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் தனது ஆடைகளை களைய முயற்சி செய்த அந்த நபர், மார்பகங்களை அழுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்று பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்க்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் ஐபிசி 354 பிரிவில் 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது. இந்த வழக்கில் குற்றவாளி அந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கனேடிவாலா கடந்த 19 ம் தேதி குற்றவாளி என செசன்ஸ் நீதிமன்றம் அறிவித்த நபரை குற்றமற்றவர் என தீர்ப்பளித்து விடுவித்தார். மேலும் தனது தீர்ப்பில் 12 வயது சிறுமியின் ஆடைகளை கலையாமல் மார்பகங்களை பிடிப்பதும், அழுத்தி தொடுவதும் பாலியல் சீண்டலில் வராது.

மேலும் அவ்வாறு செய்வது போக்சோ சட்டத்திலும் வராது. ஐபிசி 354 பிரிவில் மட்டுமே வரும். அதற்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறை மட்டுமே வழங்கலாம் என்றும் தெரிவித்தார். 12 வயது சிறுமியின் மேல் ஆடையை அகற்றாமல் அந்த மாதிரி செயலில் ஈடுபட்டதற்கு இங்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

தொடர்ந்து அந்தச் சிறுமியின் மேல் ஆடைக்குள் கையை நுழைத்தாலும் அதுவும் பாலியல் வன்கொடுமையில் வராது. பாலியல் வன்கொடுமை என்பது, ஆடைகள் இன்றி, வெற்று உடலோடு உடல் தொடர்பு கொள்வதுதான் என்றும், மற்றதெல்லாம் பாலியல் வன்கொடுமையில் வராது என்றும் கூறி பலருக்கும் அதிர்ச்சி அளித்தார். ஆதலால் அந்த சிறுமியின் மேல் ஆடையை அகற்றாமல் தொட்டதன் காரணமாக அது பாலியல் வன்கொடுமையில் சேராது என்றும், எனவே அந்த நபரை விடுவிக்கிறேன் என்றும், அவர் தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர் ஏற்கனவே போதுமான அளவு சிறை தண்டனை அனுபவித்து விட்டார். அதன் காரணமாக அவரை விடுதலை செய்கிறேன் என்று தீர்ப்பளித்தார். நாக்பூர் அமர்வு அளித்த தீர்ப்பு பலதரப்பட்ட வகையிலும்  சர்ச்சைக்கு உரியதாக மாறியது. இதற்கு சட்ட நிபுணர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன.

இந்நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மும்பை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.

Previous articleநம் எல்லையில் சீனா உருவாக்கிய கிராமங்கள்! அதுவும் இத்தனையா? செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்!
Next articleதிருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வந்து செல்ல அனுமதி! ஆனால் இதற்கு கிடையாது! – தமிழக அரசு!