பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்! குழந்தைகள் பெண்கள் உட்பட 1000 பேரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்!

Photo of author

By Parthipan K

பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்! குழந்தைகள் பெண்கள் உட்பட 1000 பேரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்!

Parthipan K

Tourists stuck in the snow! Indian army rescued 1000 people including children and women safely!

பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்! குழந்தைகள் பெண்கள் உட்பட 1000 பேரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்!

தற்போது குளிர்காலம் நிலவி வருவதினால் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகின்றது. கடந்த மாதங்களில் டெல்லியில் கடும் பனிப்பொழிவு இருந்தது. அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளிகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பெரிதும் பாதிப்படைந்தது.

இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 12ஆம் தேதி அங்குள்ள சாங்கு ஏரிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அனைத்தும் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டது. அதை தொடர்ந்து இந்திய ராணுவம் விரைந்து சென்று அங்குள்ள உள்ளூர் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுமார் 370 சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

மேலும் அங்கு பணியில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து மீண்டும் இயங்க  தொடங்கியது. இந்நிலையில் கிழக்கு சீக்கியில் உள்ள மலைத்தொடர்களில் சுற்றுலாப் பயணிகள் பலர் பனிப்பொழிவு காரணமாக சிக்கிக் கொண்டனர். அங்கிருந்து அவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது வரை  ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆபரேஷன் ஹிம்ராஹத் பெயரில் இந்திய ராணுவம் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் பலரும் மீட்கப்பட்டு பத்திரமாக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து உதவிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது, சரியான நேரத்தில் உதவிக்கு வந்த இந்திய ராணுவத்திற்கு மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாப் பயணிகளும் நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.