80 வயதில் இளமையை நோக்கி.. இந்த ஜூஸ் குடித்தால் வாழ்நாள் முழுவதும் இளமை தோற்றத்தில் இருக்கலாம்!!

Photo of author

By Divya

80 வயதில் இளமையை நோக்கி.. இந்த ஜூஸ் குடித்தால் வாழ்நாள் முழுவதும் இளமை தோற்றத்தில் இருக்கலாம்!!

Divya

நீங்கள் வயதான பிறகும் இளமையாக இருக்க பாலக்கீரை,வெள்ளரி போன்ற பொருட்களை கொண்டு ஜூஸ் செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)பாலக்கீரை
2)வெள்ளரிக்காய்
3)எலுமிச்சை அல்லது நெல்லிக்காய்
4)இஞ்சி
5)தேன்

செய்முறை விளக்கம்:-

ஒரு கைப்பிடி பாலக்கீரையை எடுத்து தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு நீங்கள் ஒரு வெள்ளரிக்காய் எடுத்து கழுவிய பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு எலுமிச்சை அல்லது ஒரு பெரிய நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள்.நெல்லிக்காய் எடுத்தால் அதன் விதை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

நெல்லிக்காய்க்கு பதில் எலுமிச்சை எடுத்தால் அதை நறுக்கி விதை நீக்கிவிட்டு சாறை மட்டும் ஒரு கிண்ணத்திற்கு வடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மிக்சர் ஜாரில் பாலக்கீரை மற்றும் வெள்ளரிக்காய் போட்டுக் கொள்ள வேண்டும்.நெல்லிக்காய் இருந்தால் அதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு துண்டு இஞ்சி எடுத்து தோல் நீக்கிவிட்டு அதையும் இதனுடன் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

பிறகு ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றி இந்த பேஸ்டை கலக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி நன்றாக கலந்து காலை நேரத்தில் குடிக்க வேண்டும்.

இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் நீங்கி என்றும் இளமையாக இருக்கலாம்.இந்த பாலக்கீரை ஜூஸை எந்த வயதினரும் குடிக்கலாம்.பாலக்கீரைக்கு பதில் முருங்கை கீரை,பொன்னாங்கண்ணி கீரை போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட்
2)மாதுளை
3)தக்காளி
4)தேன்

செய்முறை விளக்கம்:-

ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு மாதுளம் பழத்தை நறுக்கி அதன் விதைகளை தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இவை மூன்றையும் மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இந்த ஜூஸை கிண்ணத்திற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் சருமப் பிரச்சனைகள் முழுமையாக குணமாகும்.