குழந்தைகள் உயிரோடு விளையாடும் விளையாட்டு டாய்ஸ்!! பெற்றோர் இனி இந்த தவறை செய்யாதீங்க!!

Photo of author

By Divya

குழந்தைகள் உயிரோடு விளையாடும் விளையாட்டு டாய்ஸ்!! பெற்றோர் இனி இந்த தவறை செய்யாதீங்க!!

Divya

விளையாட்டு பொம்மைகளை விரும்பாத குழந்தைகளே இல்லை.வித விதமான விளையாட்டு பொம்மைகள் குழந்தைகளை மகிழ்விக்கிறது.ரிமோட் கார்,பலூன்,டெடி,பேசும் பொம்மைகள்,போன்,டால்,மினி கிட்சன் பொருட்கள் என்று குழந்தைகள் விளையாடுவதற்கு என்று ரக ரகமான விளையாட்டு பொருட்கள் கடைகளில் கிடைக்கிறது.

குழந்தை பருவத்தில் பெற்றோரிடம் பொம்மைகள் வாங்கி தர சொல்லி அனைவரும் அழுது புரண்டு இருப்போம்.குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான விளையாட்டு பொம்மைகள் தற்பொழுது விபரீத பொருளாக மாறி வருகிறது வேதனையை அளிக்கிறது.

விளையாட்டு பொம்பையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் குழந்தைகளிடம் இருக்காது.சில குழந்தைகள் பொம்மைகளை வாயில் வைத்து கடித்துவிடுவார்கள்.பலூன் போன்ற விளையாட்டு பொருட்களை குழந்தைகளிடம் கொடுத்தால் அவர்கள் அதை சீக்கிரம் உடைத்துவிடுவார்கள்.இந்த வெடித்த பலூனை தெரியாமல் வாயில் வைத்து விழுங்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

வயிற்றில் சென்று பலூன் குழந்தையின் உணவுக் குழாய் அல்லது மூச்சுக் குழாயில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும்.குழந்தையின் சுவாசப் பாதையில் பலூன் அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருள் சென்றுவிட்டால் மூச்சுத் திணறல்,இருமல்,சுவாசிக்க சிரமம் போன்றவை ஏற்படும்.

அதுவே குழந்தையின் செரிமான மண்டைலத்திற்குள் விளையாட்டு பொருள்,காயின் போன்றவை சென்றால் குழந்தைகளிடம் எந்த அறிகுறியும் தென்படாது.குழந்தைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு விட்டதை உறுதி செய்தால் நீங்கள் சிறிதும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்த பின்னர் உரிய சிகிச்சை மூலம் அப்பொருளை வெளியில் எடுத்துவிடலாம்.

குழந்தைகள் இருக்கும் வீட்டில் காயின்,முடி உள்ள பொம்மை,வட்ட வடிவில் உள்ள சிறு பேட்டரி,பலூன்,அந்துருண்டை,கெமிக்கல் பொருட்கள் போன்றவற்றை அவர்கள் கைக்கு எட்டும் இடத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் விளையாட்டு பொருட்களை விழுங்கி விட்டார்கள் என்றால் உடனே குழந்தையின் மார்பில் அழுத்தம் கொடுப்பது,தொண்டை பகுதியில் அழுத்தம் கொடுத்து பொருளை வெளியேற்ற நினைப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.குழந்தைக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க நீங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வது தான் நல்லது.