மோதிக் கொண்ட வியாபாரிகள்! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்!

Photo of author

By Sakthi

உத்தரபிரதேச மாநிலம் பத்பத் என்ற பகுதியில் கடையில் வியாபாரம் குறித்து வியாபாரிகள் 2 குழுவினரை இடையே சண்டை உண்டானது .அதன் பிறகு சிறிது நேரத்தில் இரண்டு குழுவினரும் ஒருவரையொருவர் ராக்கி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சற்று நேரத்தில் பலர் அங்கு ஒன்று கூடியதால் மோதல் வெடித்தது
வியாபாரிகள் இடையே கருத்து வேறுபாடு இருந்தால் கம்பு மற்றும் கட்டைகளைக் கொண்டு தாக்கி கொண்டதன் வீடியோ வெளியானதால் பரபரப்பு உண்டானது.

அந்த சமயத்தில் இரண்டு குழுவினரும் தகராறு செய்து இடத்தில் அவரவர்களும் கம்பு மற்றும் பிளாஸ்டிக் பைப் போன்றவற்றை எடுத்துக் கொண்டு சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் பல பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்த தகராறு தொடர்பாக விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் இதுவரையில் 8 நபர்களை கைது செய்திருக்கிறார்கள். வியாபாரிகள் பலர் கையில் கிடைத்த கம்பிகள் மற்றும் கட்டைகளைக் கொண்டு பயங்கரமாக தாக்கிக் கொள்ளும் காணொளி இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.