Tenkasi: கேரளாவில் உள்ள சபரி மலைக்கு சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வேன் விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள்.
சபரி மலைக்கு செல்ல ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க கோவிலுக்கு செல்வார்கள். அதே போல் இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் சபரிமலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் தயாராகி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் பலரும் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து வீடு திரும்பி வருகிறார்கள்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ஐயப்பன் தரிசனத்துக்கு சென்ற வேன் விபத்தில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வேன் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தலைகீழாக கவிழ்த்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து செங்கோட்டை அடுத்துள்ள தேன்பொத்தை என்ற பகுதியில் இரவு நேரத்தில் நடந்துள்ளது.
மேலும் ஓட்டுநர் அதிவேகமாக சென்று உள்ளார் என கூறப்படுகிறது. இந்த விபத்து நடந்த போது அந்த சத்தத்தை கேட்டு அங்கிருந்து வந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பக்தர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அங்கு சில நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஐயப்ப பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.