பிரபல நடிகையின் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்!!

தமிழ்சினிமாவில் கதாநாயகியாக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது அம்மா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் ஒரே நடிகையாக விளங்குபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

இவருடைய தந்தை  ஏ.பி.ராஜ்  மலையாள சினிமா துறையின் இயக்குனர் ஆவார். இன்று இவர் மாரடைப்பின் காரணமாக திடீரென்று மரணம் அடைந்தார்.

இவருடைய இறப்பு சினிமா பிரபலங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் மலையாள பிளாக்பஸ்டர் மூவிகள் பலவற்றை இயக்கிய பெருமைக்குரியவர்.பிரபல நடிகையின் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்!!மேலும் இவர் தமிழ்நாடு இயக்குனர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். மலையாளம் மட்டுமல்லாமல் சிங்கள 11 படங்களையும் இயக்கி, இலங்கையிலேயே தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

மேலும் இவருடைய மரணத்திற்கு தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் பலரும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

 

 

Leave a Comment