ஆடு திருட சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்:? கள்ளக்குறிச்சியில் நடந்த பரிதாபம்!

Photo of author

By Pavithra

ஆடு திருட சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்:? கள்ளக்குறிச்சியில் நடந்த பரிதாபம்!

Pavithra

நள்ளிரவில் ஆடு திருட சென்ற நபர் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த பரிதாபம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில் பாடி என்னும் கிராமத்திற்கு ஆடு திருடுவதற்காக ரவி அழகர் மற்றும் செந்தில் ஆகிய மூவரும் நேற்று இரவு சென்றுள்ளனர்.

இதில் செந்தில் என்பவர் பைக்கை ஓட்டி வந்தவர்.அவர் கிராமத்திற்கு வெளியே நின்று விட்டார்.மீதமிருந்த ரவி மற்றும் அழகர் கிராமத்திற்குள்ளே சென்று ஆடு திருட முற்பட்ட போது திடீரென்று சத்தம் கேட்டதால் கிராம மக்கள் அவர்களைப் பார்த்து விட்டனர்.மக்களைப் பார்த்த பயத்தில் அவிடத்தை விட்டு ஓடி தப்பிக்க முயன்றனர் ரவியும் அழகரும்.ஆனால் இரவு நேரம் என்பதால் ஓடும் வழியில் கிணறு இருந்தது தெரியாமல் ரவி என்பவர் கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.இதனையடுத்து ரவி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விட்டார்.

இந்த சம்பவங்களை குறித்து ஊர்மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே,சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செந்தில் மற்றும் அழகரை கைதுசெய்தனர்.பின்னர் ரவி-ன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.