சேலம் மாவட்டத்தில் நான்கு ரோடு பகுதிக்கு அருகில் அண்ணா பூங்கா உள்ளது. அங்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் திருவருள் சிலையானது வைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வருடங்களுக்கு முன்பு 75 ரூபாய் செலவில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சிலை மீது மர்ம நபர்கள் கருப்பு மை ஊற்றி சென்றுள்ளனர். இதனால் அச் சுற்று வட்டார பகுதியில் பரப்பரப்பாக காணப்படுகிறது.
இது ரீதியாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். தற்சமயம் திமுக ஆட்சி மீது தொடர் அதிருப்தியில் பொதுமக்கள் உள்ளனர். தொடர்ந்து கொலை கொள்ளை வழக்கு அதிகரித்திருப்பதால் இந்நிலை உண்டாகியுள்ளது. மேலும் சேலம் மாவட்டமானது எடப்பாடியின் கோட்டை என்பதால் இந்த வேலையை அவர் ஆதரவாளர்கள் யாரேனும் செய்திருப்பாளர்களா என்று சந்தேகப்படுகின்றனர். இது ரீதியாக திமுக மேலிடத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக ஆட்சி மீது மக்கள் பெரிதான பிடிப்பு இல்லை என்பதும் அப்பட்டமாக தெரிகிறது. தற்போது சேலம் மாவட்டத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு மை போட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.