செல்லம்மா தொடரின் கதாநாயகிக்கு நேர்ந்த சோகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

செல்லம்மா தொடரின் கதாநாயகிக்கு நேர்ந்த சோகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

 

சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து வருபவர் திவ்யா.இவர் இவர் கேளடி கண்மணி, மகராசி,செல்வந்தி, செல்லம்மா ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். அப்போது அதே தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த அரணவ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. பின்பு ஐந்தாண்டு காலம் திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் இல் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு வாழ்ந்து வந்த நிலையில் திவ்யா கர்ப்பமாகியுள்ளார். திருமணத்திற்கு முன்பே இவ்வாறு கர்ப்பமானதால், திடீரென்று கடந்த 4 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களில் ஒருவர் இந்து என்பதாலும் மற்றொருவர் முஸ்லீம் என்பதாலும் இரு முறைகளின் படி திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் நடிகை திவ்யா திடீரென மருத்துவமனையில் இருந்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த வீடியோவில் அவர் கணவர் அவரை அடித்துள்ளார்,அப்போது அவருக்கு வயிற்றில் அடிப்பட்டுள்ளது.பிறகு காலால் மிதித்துள்ளார்.அதில் இவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.மயக்கம் தெளிந்து பார்க்கும் பொழுது கணவர் அந்த இடத்தில் இல்லை எனவும் கூறியுள்ளார்.அதன் பிறகு இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.அப்போது அவருக்கு கர்ப்பம் கலைந்த நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்கு வந்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.இந்த வீடியோ பதிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment