சித்தப்பு வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்!! நடு ரோட்டில் நின்ற அவலம்!!

0
118

நடிகர் சரவணன் ‘பருத்திவீரன் சித்தப்பு கேரக்டரின் மூலம் ரீஎன்ட்ரி தந்தவர்’. 1991 ஆம் ஆண்டு முதல் 1998 வரை ‘பிரபல முன்னணி நடிகராக நடித்து வந்தவர்’. இவர் திரையில் இருக்கு ‘வைதேகி வந்தாச்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் 1991 ஆம் ஆண்டு அறிமுகமானார். இவர் சேலத்தை சேர்ந்தவர் என்பதால், சேலம் சரவணன் என்றே பலரும் அறிவர்.

90களில் இவர் படங்களான ‘அபிராமி, பார்வதி என்னை பாரடி, செவத்த பொண்ணு, தாய் மனசு போன்ற படங்கள் ஹிட் ஆனது’. இவரது தோற்றம் பார்ப்பதற்கு விஜயகாந்த் போலவே இருக்கும். இவரோ தீவிர ரஜினி ரசிகர். ரஜினி ரசிகர் மன்றத்திலும் பொறுப்பாளராக இருந்தார்.

 

இவரே தயாரித்து, நடித்த படங்கள் மூலம் இவர் அவரது சொத்தை முழுவதும் இழந்து உள்ளார். “தன் கூட பிறந்த அண்ணன், தம்பிகளே கஷ்ட காலங்களில் துணி கூட இல்லாமல் எடுத்து சென்று விட்டனர் என இவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்”. இந்த சூழ்நிலையில் ‘பட வாய்ப்பும் கிடைக்காமல் குடி பழக்கத்திற்கு அடிமை ஆகி உள்ளார்’. பின்னர் இயக்குனர் ”பாலாவின் படமான ‘நந்தா’ படத்தில் இவர் வில்லனாக நடித்து தனது திறமையை அருமையாக வெளிப்படுத்தி இருப்பார்”. அதன் பின் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘பருத்திவீரன் படத்தில் செவ்வாழை என்ற கேரக்டரில்’ ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசும் பொருளானார். என் வாழ்க்கை எப்படியோ போனது, அதைவிடுத்து “சினிமாவில் ரீஎன்ட்ரி” ஆகி உள்ளேன் என்றால் அதற்கு அந்த ‘கடவுளே காரணம்’ எனவும் அப்பேட்டையில் தெரிவித்திருந்தார்.

 

Previous articleஊர் மக்களுக்காக ஒரு உயிரைக் கொல்ல துணிந்தேன்!! கண் கலங்கிய காளி வெங்கட்!!
Next article“அவன் தான் பாடினானா? அதை நீ பார்த்தாயா?” என ஜிவி பிரகாஷை எதிர்த்து குரல் கொடுத்த இயக்குனர்!!