திருச்சி மாவட்டத்தில் நடந்த சோகம்! இப்படியும் கூட பாம்பு கடிக்குமா?
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் குழந்தைவேல். இவர் செங்குறிச்சி பகுதியிலுள்ள ஏ.கே.ஆர் என்ற நிறுவனத்தில் பார்சல் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி இவர் வீட்டிலிருந்து புறப்பட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் சில செடி கொடிகள் புதராக வளர்ந்திருந்தது. செடியில் மறைந்திருந்த பாம்பு திடீரென்று எதிர்பாராத விதமாக குழந்தைவேலை பாம்பு கடித்து சென்றது.
வலியில் துடித்துடித்த குழந்தைவேல் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலுள்ள உறவினர்கள் அனைவரும் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷம் தலைக்கேறியதால் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து வீரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாம்பு கடித்து இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

